Posts

Showing posts from July, 2021
Image
அபிராமி அந்தாதி -- 13 கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே (12) ஈசனின் தலையில் அம்பிகையின் திருப்பாதங்கள் மாலை போன்று இருப்பதை த்யானிக்க, பட்டர் பெருமான், அடுத்து, அம்பிகையிடம் ஆனந்தமாக, தன் பாக்கியத்தை உணர்வதாக பகிர்ந்து கொள்கிறார். கண்ணியது உன் புகழைத்தான், நான் எப்போதும் கருதியது உன்னைப்பற்றிய உன் பராக்ரமங்களைத்தான். அம்பாளின் பராக்ரமங்களுக்கு அளவு தான் ஏது? திரிபுர சிந்தரியான அவளின் வீரம்மிக்க தேவியரோடு அவள் பண்டாசுரனை அழித்த கதையை படிக்கும் போதெல்லாம் நமக்கும் அவளது அந்த பராக்ரமத்தின் சாயல் தொற்றிக்கொள்ளும். அப்படி அவளுடைய புகழையே தான் பேசிகிறேன் என்று பட்டரும் சொல்கிறார். அவளைப்பற்றியே பேச, அவளைப்பற்றியே படிக்க வேண்டும் அல்லவா? தெரியாத ஒருவரைப்பற்றி எத்தனை நேரம் பேசமுடியும்? அம்பாளை முழுமையாக தெரிந்து கொள்வது என்பது மூவருக்கே முடியாத விஷயம். ஆதலால் தான் கற்பது என்று சொன்னார். கற்பது என்று சொன்னதால், சதா கற்றுக்கொண்டே இருக்கிறார...
Image
அபிராமி அந்தாதி -- 12 ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய், வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும் தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக் கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே (11) அழியாத முக்தி ஆன்ந்தமாக அம்பிகையைச் சொன்ன பட்டர் பெருமான் அவளை அடுத்து, ஆனந்தமான அறிவாகவே பார்க்கிறார். ஆனந்தமான அறிவு என்பது சிதானந்த ரூபம் அம்பாளின் ஆயிரம் நாமங்களில் ஒன்று “பரமானந்தா” என்பது. பரம் என்றால் மேலான என்று பொருள். மேலான ஆனந்தமாக அவளே இருக்கிறாள், மேலான ஆனந்தத்தைத் தருபவளாக இருக்கிறாள். ஆனந்தம் என்பது நம்முடைய நிஜ ஸ்வரூபம், அது நம் அறிவில் ஏற்படும் தெளிவினால் வெளிப்படுவது என்பதால் தான் என் அறிவாய் என்றார். அம்பாளே அறிவில் நிறைந்திருந்தால், இந்த உலக விஷயங்களில் ஆசை வராது, அதனால் துன்பமும் வராது இல்லையா? அவளை “ஸத்யஞானானந்தரூபா” என்றல்லவா அழைக்கிறோம்? அறிவாய், அறிவில் விளங்கும் ஆன்ந்தமாய்த் தெரியும் அன்னையின் கருணை நிறைந்த அமுதமுமாய் இருக்கிறது சாதகனுக்கு. அமிர்தம் என்றால் அழியா பொருள் என்று பொருள். ம்ருதம் என்றால் அழியக்கூடியது. அம்ருதம் என்றால் அழிவற்ற என்று பொருள். அழிவற்ற ...
Image
  அபிராமி அந்தாதி -- 11 நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை, என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின் ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே (10) அம்பாளை தன் முன், தன் உள்ளத்திரையின் முன் எப்போதும் நிற்க வேண்டும் என்று ஆசையாகக் கேட்டவர், தான் என்ன செய்வார் என்பதை எப்படிச் சொல்கிறார் பாருங்கள். நின்று, இருந்து, கிடந்து, நடந்து என்று எத்தகைய வேலைகள் செய்து கொண்டிருந்தாலும், அவளுடைய திருவடிகளின் நினைவிலேயே இருப்பார் என்று சொல்கிறார். அம்பாளின் திருவடிகளை போற்றிச் சொல்லும் போது அவற்றை ஒரு திருவடி வேதத்தின் கர்மகாண்டத்துக்கும் இன்னொரு திருவடியை வேதத்தின் ஞானகாண்டத்துக்கும் உரியதாகச் சொல்லுவர். கர்ம காண்டத்தில் தான் செய்யவேண்டிய தர்மமான செயல்களும், பல தெய்வ உபாசனைகளும் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றை பலனில் பற்றில்லாது, மனத்தூய்மை ஒன்றே வேண்டி செய்யும் போது, அந்த சாதகனுக்கு, அம்பாள் ஞானம் பெறுவதற்கான மனத்தூமையும், தயாரிப்பும் தருவாள். அதனோடு, அவனுக்குத் தகுந்த குருவாக, அவளே வருவாள். அப்படி கருணா விலாசம் நிறைந்தவள் அம்பாள...
Image
  அபிராமி அந்தாதி 10 கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின் பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர் திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும், முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே (9) தனது கருத்தெல்லாம் அம்பிகையின் தாளில் இருக்கிறது என்றார், இப்போது, தந்தையான சிவபெருமானோ, அம்பாளின் கருணை பொங்கும் ஸ்தனங்களைக் காண்கிறார் என்று சொல்கிறார் இந்த பாடலில். தந்தையின் கண்கள், எதைக் காணுகின்றன? பொன்னிறத்தில் ஜொலிக்கும் அன்னையின் இரு மலைகள் போல் பெருத்திருக்கும் திருமுலைகளை. எதற்காக, காண்கின்றன என்றால், அந்த கருணை என்ற திருவமுது ஒத்த பால் சுரக்கும் பெருமுலையாள், திருஞானசம்பதப்பெருமானுக்கு கிண்ணத்தில், அவர் பாலுக்கு அழும் பிள்ளையாக, குளத்தின் கரையில் நின்று அழுத போது பரிவோடு தந்ததை நினைத்து, அப்பேற்பட்ட கருணையின் இருப்பிடமாக, கருணைக்கு அளவில்லை என்பதற்கு உதாரணமாக, குறீயீடாக, பெருந்தனம் என்று சொல்லி, அதை அத்தன் காண்கிறார் என்றும் சொல்கிறார். அழகான அந்த பெரும் மலை போன்றிருக்கும் முலைகள் மேல் முத்து மாலைகள் ஆரம் போல் தொங்கிக்கொண்டிருக்கின்றன. அவள் கை...
Image
  அபிராமி அந்தாதி -- 9 சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம் வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல் அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன் கம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே (8) ஒவ்வொரு முறை அம்பிகையை குறிப்பிடும் போதும், அவளை சிந்தூர வண்ணத்தினள் என்றே அவள் அழகை அழகின் அமுதத்தை பருகுகிறார் அபிராமி பட்டர். சிந்தூர வண்ணத்து சுந்தரியான அவள் யாராம்? என் தந்தையின் துணைவி என்று சொல்கிறார். உலகத்தின் தாயும் தந்தையும் ஈஸ்வரனும், ஈஸ்வரியும் தானே! காமேஸ்வரன் என்று ஈஸ்வரனை சொல்கிறோம். காமத்தை ஆண்டவர். காமத்தை ஜெயித்தவர். அவருடைய பத்னியான அம்பாள் பேரழகு கொண்டவள். அழகு அவள் கருணையின் ப்ரதிபலிப்பாகவே இருக்கிறது. என் பாசத்தொடரை வந்து அரி என்று அம்பாளை வேண்டுகிறார். அன்னையின் கருணையினால் தான் இந்த பிறவி தொடரும் மஹா மாயையில் இருந்து விடுபட முடியும். பசுவாக இருக்கும் ஜீவன், பந்தமாகிய பாசத்தை அறுக்க பதியாகிய ஈசனை அடைய வேண்டும் என்று சைவ சித்தாந்தம் சொல்கிறது. பாசத்தொடர் என்பது பந்தங்கள். நமக்கு இந்த உலகில், உயிரில், உறவுகளில் உடைமைகளில் இருக்கும் அபிமானங்கள். இவை இல்லாவிட்ட...
Image
  அபிராமி அந்தாதி -- 8 ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர் கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும், மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும் துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே (7) அம்பாளின் சிந்தூர வர்ணம் மிக ஆகர்ஷணமாக இருக்கிறது பட்டருக்கு. அடிக்கடி அவளை அந்த “சிந்தூர திலகாஞ்ச்சிதா” என்று சொல்லும் சஹஸ்ரநாம நாமாவைப்போல, சிந்தூர வண்ணப்பெண்ணாகவே அழைத்து மகிழ்கிறார். அழைத்தவர், யாரெல்லாம் அவளை வணங்குகிறார்கள் என்று சொல்கிறார். கமலாலயன் என்றால், தாமரை மீதமர்ந்திருக்கும் ப்ரம்ம தேவர், மதியை தலையில் தரித்த, மூங்கிலைப்போன்ற தோள்களையுடைய அம்பிகையைப் பாதியுருவாய்க் கொண்டு இருக்கும், அம்பிகை மகிழும் மணாளன் சிவபெருமானும், அவரோடு திருமாலும் சேர்ந்து வணங்குகிறார்கள் அம்பாளை. அப்படிப்பட்ட சுந்தரியிடம், வெறும் அல்பமான உலக விஷயங்களையா கேட்கமுடியும்? தயிரைக்கடையும் மத்தானது எப்படிச் சுழன்று கொண்டே இருக்கிறதோ அப்படி இந்த உயிரானது, மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து, பல்வேறு பிறவிகளில் அகப்பட்டு, சுழற்சியே நிற்காது தளர்வுற்று இருக்கிறதாம். புல்லாகிப் பூடாய் பல்விருகமாகி எல்லாப்...
Image
  அபிராமி அந்தாதி -- 7 சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை. சிந்தையுள்ளே மன்னியது, உன் திரு மந்திரம்,- சிந்துர வண்ணப் பெண்ணே.- முன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே (6) அரும்பாடுபட்டு, அரிய சாதனைகள் செய்து, தன் உடலாலும், மனதாலும், தூயவனாக்கிக்கொண்டு, புற உலக நாட்டங்களில் இருந்தும், அகத்தில் அபரிமிதமான அன்புடனும், அன்னையைத் தன் ஹ்ருதயத்தில் வீற்றிருக்க வைக்கும் சாதகன், அடுத்த நிலை என்னவாக இருக்கும்? சிந்தை முழுதும், அன்னையின் பொற்றாமரைப்பாதங்கள், சாதகனின் தலையில் (சென்னியில்) வைத்திருக்க, அகில சராசரங்களும் அன்னையின் அருளால், அன்னையாகவே தெரியும் அதிசயம் உள்ளத்தில் தோன்றும் அல்லவா? அம்பாளின் அருள் கிடைத்துவிட்டால், முதல் மாற்றம் சாதகனின் பார்வை விசாலமாவது தான். அத்தனை உயிர்களிடமும் அன்பும் கருணையும், அபரிமிதமாக ஊற்றெடுக்கும். யார் பசியும் தான் பொறுக்க மாட்டார். யார் துயரும் காணவொட்டாது. அம்பாளின் பரம வாத்ஸல்யம் அப்படியே அனுபவமாக வந்துவிடும். அதனால் தான் அந்தரி சுந்தரி உன் பாதம் என் சென்னியதே என்று சொன்னவர், அப்படி வைத்த உன்னிரு பாதமானது சிந்...
Image
  அபிராமி அந்தாதி -- 6 பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள், வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன் அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல் திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே (5) அம்பிகையை அத்தனுடன் சேர்ந்து தன் புத்தியில் யாண்டும் இருந்து அருள் புரிய வேண்டும் என்று வேண்டினார் பட்டர் பெருமான். இந்த பாடலில் அப்படி யாண்டும் இருக்கும் அம்பிகையின் பாதங்கள் அவர் தன் தலையில் இருக்கும் விதமாக த்யானித்துத் துதிக்கிறார். முப்புரை என்றால், திரிபுரை என்று பொருள். திரிபுரா ரஹஸ்யம் என்பது அம்பாளின் பரம ரஹஸ்யமான ஸ்வரூபங்களின் அர்த்தங்கள் பொதிந்த ஸ்ரீவித்யா மார்க்கத்தில் உபாசனைக்கான ஒரு அரிய நூல். அம்பிகை திரிபுரசுந்தரி என்று திருநாமம் கொண்டு துதிக்கிறோம் சஹஸ்ரநாமத்தில். புரை என்றால் மூத்தவள் என்றும் ஒரு பொருள் உண்டு. மும்மூர்த்திகளுக்கும் மூத்தவள் அம்பாள் என்றொரு பொருள் உண்டு. மூவகை நாடிகளான, இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகியவற்றில் உரைபவள் என்றொரு பொருள். மூன்றாக இருக்கும் சிலவற்றில் மூன்று ஸ்வரம், முத்தீ, மும்மூர்த்திகள், மும்மறை, முச்சக்தி, மூவுலகு, மு...
Image
  அபிராமி அந்தாதி -- 5 மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே (4) அம்பிகையைச் சரணடைந்தார். அவளது சரணங்களை நன்றாகப் பிடித்துக்கொண்டார். மேலும், அதனின்று விலகி இருக்காது, எந்த நாளும், எல்லாப் பொழுதுகளும் அருள் சக்தி புத்தியில் நிறைந்து இருக்க வேண்டும் என்று தனக்கு விபரீதமான எண்ணங்கள் ஏற்படாது இருக்க வேண்டும் என்பதற்காக துதிக்கிறார் பட்டர் பெருமான். யாரெல்லாம் அம்பிகையை வழிபடுகிறார்கள் என்று விவரிக்கிறார். மனிதர்கள், தேவர், மாயா வித்தைகள், சித்துக்கள் வரப்பெற்ற முனிவர்கள், தங்கள் தலையைக் குனிந்து, அம்பிகையின் திருவடியில் வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். உலகம்மை அல்லவா. அவள் முன் அத்தனை பேரும் வணங்குவது இயல்பே. என்ன கடினமான சூழல் யாருக்கு வந்தபோதும், அன்னையின் கருணை இருந்தால் அந்தக் கஷ்டங்கள் ஒரு க்ஷணத்தில் பொடிப்பொடியாகி விடும் என்பது தானே நிதர்சனம்? சுரபதியான இந்திரனுக்கு துன்பம் வந்த போது, சூரர்களை அழிக்க, குமரன் போருக்குச் செல்ல, அன்னைய...
Image
  அபிராமி அந்தாதி -- 4 அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப் பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால், மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே (3) துணையாக வேறு ஒரு தெய்வமும் இல்லை, அபிராமியின் துணை ஒன்றே துணை என்று அறிந்தார் பட்டர். மறை என்றால், உயர்ந்த ரஹஸ்யம் என்று பொருள். மறை என்றால் வேதம் என்றும் ஒரு பொருள். எவரும் அறியா என்று சொன்னதால் இங்கு ரஹஸ்யம் என்று கொள்ளலாம். எவரும் அறியாத ரஹஸ்யமான அம்பிகையின் மேன்மைகளை ஸ்ரீவித்யையின் பரமதாத்பர்ய ரஹஸ்யங்களை நன்கு தகுந்த குருவின் மூலம் கற்றதனால், செறிந்தேன் என்று கூறுகிறார். செறிவது என்றால், செம்மையாவது, பண்படுவது. உத்தமமான மனதை அடைவது என்று கொள்ளலாம். அம்பிகையின் அருளானது உத்தமமான ஒரு மனதைத் தரும். அவளுடைய அருளை சிந்திக்க சிந்திக்க, மனம் கீழ் நிலைகளில் உள்ள ஆசைகளில் இருந்து விடுபடும். நின் திருவடிக்கே திருவே என்று சொல்கிறார். அம்பிகையின் திருவடியே சகல மங்களங்களும் தர வல்லது. திரு என்றால் மஹாலக்ஷ்மி என்று பொருள். மஹாலக்ஷ்மி என்ற நாமமும் அம்பாளின் நாமமாக ஸஹஸ்ரநாமத்தில் சொல்...
Image
  அபிராமி அந்தாதி -- 3 துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின் பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங் கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில் அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே. (2) அம்பிகையை அவருக்கு என்னவாகவெல்லாம் சொல்கிறார் என்று பார்க்கலாம். துணை என்று சொல்கிறார். துணை என்றால், உதவுபவர். எதில்? எதில் என்று ஒரு வரைமுறையெல்லாம் கிடையாது, சகல காரியங்களுக்கும், துணையாக, சகல நேரத்திலும், இருக்க வேண்டும் என்று பொருள் பட, துணை மட்டும் அல்ல, நான் தொழும் தெய்வமும் அன்னை தான் என்று கூறுகிறார். கொஞ்சம் உதவி செய்தாலே அவர் தெய்வமாகத் தெரிவார் இல்லையா? ஆபத்து காலத்தில் யார் உதவி செய்தாலும் தெய்வ ரூபம் என்று சொல்வோம். எல்லா காலத்திலும் எல்லா நேரத்திலும் துணையாக, ஆபத்து காலங்கள் எல்லாம் உதவி செய்பவர் தெய்வம் என்றால் அது சரி தானே!. அம்பாள் துணையாய் இருக்கிறாள், தெய்வமாக இருக்கிறாள். எப்போதும், அலுத்துக்கொள்ளாமல், சதா சர்வகாலமும், கேட்ட உதவியெல்லாம் செய்ய வேண்டும் என்றால், வேறு யாரால் முடியும்? அதனால் தான் பெற்ற தாய் என்று சொல்கிறார் பட்டர். அம்பாளை ...
Image
அபிராமி அந்தாதி -- 2 உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே: (1) அம்பிகையின் வர்ணனை சொல்லப்படுகிறது. உதிக்கின்ற இளம் சூரியனின் கதிரைப்போன்று இருக்கிறாள். அவள் நிறம், பால சூரியனின் சிவந்த நிறத்தை ஒத்து இருக்கிறது என்று கூறுகிறார். “உத்யத்பானு ஸஹஸ்ராபா” என்று ஆயிரத்தில் ஒரு நாமம் அன்னைக்கு. “ஸிந்தூரார்ணவ விக்ரஹாம்” என்று த்யான ஸ்லோகத்தில் சொல்கிறோம். சிந்தூர ஆர்ணவ என்றால், இளம் சிவப்பு நிறம் என்று பொருள். பால அர்க்க கோடி ப்ரதிபாம் த்ரிநேத்ராம் என்று புவனேஸ்வரியைத் துதிக்கும் ஸ்லோகத்திலும் வரும். பால அர்க்க என்றால் உதிக்கின்ற சூரியனின் இளம் கதிர்கள் என்று பொருள். உதிக்கின்ற சூரியனின் நிறம், இளம் சிவப்பில், கண்ணுக்கு உறுத்தாத, சிவந்த அழகிய நிறத்தில் இருக்கிறாள். உச்சியில் திலகம் அணிந்து மங்களகரமாக இருக்கிறாள். இன்றெல்லாம், திலகம் அணிவதே வழக்கமில்லாது போய்க்கொண்டிருக்கிறது. நல்ல, தெய்வீகமான ஒரு தோற்றம், திலகம் அணிவதால் தான் வரும். அதில...
Image
  அபிராமி அந்தாதி -- 1 சர்வ சக்தியும் பரமகருணையும் ஒருங்கே கொண்ட உலகனைத்துக்கும் தாயாக விளங்கும் அந்த பராம்பிகையின் புகழையும், அவள் கருணையென்னும் அமுதத்தின் அளவையும் யாராலும் அத்தனை சுலபமாக கூறிவிட முடியாது. அவள் பெருமைகள் சொல்ல மனிதர்களாலும் தேவர்களாலுமே இயலாது என்பதால் தான், வசின்யாதி வாக்தேவிகளைக்கொண்டே அம்பாள் தன்னுடைய ஆயிரம் நாமங்களைக் கூற வைத்தாள். அம்பிகையின் ப்ரத்யேக கருணை ஒன்றிருந்தால் மட்டுமே அவளைப்பற்றி சிந்திக்கவும் சொல்லவும் முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். தமிழில் அம்பாளைப் போற்றி எழுதப்பட்ட மிக உன்னதமான நூல் அபிராமி அந்தாதி. அந்தாதி என்பது ஈற்றடி அடுத்த பாடலின் முதலடியாகக் கொண்டு எழுதப்படுவது. இப்படி ஒரு நூலைப் புனைய அம்பாளின் திருவுள்ளம் தான் காரணமாக இருந்திருந்திருக்கிறது என்பது திண்ணம். சோழ தேசத்தின் காவிரி கரையில் திருக்கடையூர் என்ற சிறு க்ராமத்தில் உறையும் அம்பாள் அமிர்தகடேஸ்வரர் சஹித ஸ்ரீ அபிராமி. அவ்வன்னையின் திருவுள்ளத்தால், அந்த ஊரில் அம்பிகையின் தீவிர உபாசகராக இருந்த ஸ்ரீ சுப்ரமணியன் என்ற இயற்பெயர் கொண்ட ஸ்ரீ அபிராமி பட்டர் இந்த அரிய பொக்கிஷத்தை...