அபிராமி அந்தாதி -- 2
உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே: (1)
அம்பிகையின் வர்ணனை சொல்லப்படுகிறது. உதிக்கின்ற இளம் சூரியனின் கதிரைப்போன்று இருக்கிறாள். அவள் நிறம், பால சூரியனின் சிவந்த நிறத்தை ஒத்து இருக்கிறது என்று கூறுகிறார். “உத்யத்பானு ஸஹஸ்ராபா” என்று ஆயிரத்தில் ஒரு நாமம் அன்னைக்கு. “ஸிந்தூரார்ணவ விக்ரஹாம்” என்று த்யான ஸ்லோகத்தில் சொல்கிறோம். சிந்தூர ஆர்ணவ என்றால், இளம் சிவப்பு நிறம் என்று பொருள்.
பால அர்க்க கோடி ப்ரதிபாம் த்ரிநேத்ராம் என்று புவனேஸ்வரியைத் துதிக்கும் ஸ்லோகத்திலும் வரும். பால அர்க்க என்றால் உதிக்கின்ற சூரியனின் இளம் கதிர்கள் என்று பொருள். உதிக்கின்ற சூரியனின் நிறம், இளம் சிவப்பில், கண்ணுக்கு உறுத்தாத, சிவந்த அழகிய நிறத்தில் இருக்கிறாள். உச்சியில் திலகம் அணிந்து மங்களகரமாக இருக்கிறாள்.
இன்றெல்லாம், திலகம் அணிவதே வழக்கமில்லாது போய்க்கொண்டிருக்கிறது. நல்ல, தெய்வீகமான ஒரு தோற்றம், திலகம் அணிவதால் தான் வரும். அதிலும், உச்சியில் பெண்கள் அணியும் குங்குமத்தில் மஹாகஷ்மி வாசம் செய்கிறாள் என்று சாஸ்த்திரம் சொல்கிறது. அம்பாளை மனதார ஏற்று வழிபடும் யாவரும், மங்கலப் பொருட்களைக் கட்டாயம் அணிய வேண்டும்.
உணர்வுடையோர் என்று குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். மதிக்கும் மாணிக்கம் என்றால், கிடைத்தற்கு அரியது என்று அறிந்து, அந்த அரிய தன்மையை மதித்து போற்றும், மெய்யறிவு பெற்ற ஞானியர் போற்றி தொழும் மாணிக்கம் என்று அம்பாளை குறிப்பிடுகிறார். ஸ்ரீவித்யா உபாசனை என்பது அம்பாளை ப்ரத்யேகமாக, அம்பாளே பரப்ரம்ம்ம் என்று உணர்ந்து உபாசிக்கும் ஒரு முறை. சக்தியை வழிபடும் மதம் சாக்த மதம். சாக்த மதத்தில் மிக உயர்ந்த வழிபாடு, ஸ்ரீவித்யா உபாசனை முறை. அப்படி மிக உயர்ந்த வழிபாடு செய்யும் கற்றறிந்த ஞானியர் வழிபடும் அரிய பொக்கிஷம் அம்பாள் என்று உணர்த்தவே “உணர்வுடையோர் மதிக்கும் மாணிக்கம்” என்றார்.
மாதுளம் போது என்றால், மாதுளம் பூவையொத்த நிறத்தவள் என்று பொருள். அவள் இளஞ்சிவந்த மேனியின் வர்ணனை, மாதுளம்பூ நிறத்தாளை என்று இன்னொரு இடத்தில் சொல்லப்போகிறார். மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடியாம் அவள்.
மலர்க்கமலை என்பது மஹாலக்ஷ்மி, கமல மலர் அதாவது தாமரையில் வீற்றிருக்கும் அன்னை மஹாலக்ஷ்மி அபிராமியை உவந்து துதிக்கிறாள், அப்படித் துதிக்கும் அன்னையானவள், மெல்லிய கொடி போன்ற இடை கொண்டவளாய், மின்னல் கொடிபோன்றவளாய் இருப்பதை வர்ணிக்கிறார்.
அம்பாளின் உருவம் மெல்லிய மின்னல் கொடி போன்று இருக்கிறது, அவள் மேனியின் வாசமோ, மென்மையான, குங்குமத்தின் வாசம் போன்று வீசுகிறது, அப்படிப்பட்ட அன்னை அபிராமி தான் என்னுடைய வழித்துணையாக யாண்டும் இருக்க வேண்டும் என்று கேட்கிறார் பட்டர் பெருமான்.
அன்னையின் அருள் இருந்தால் தான் அவளை உபாசிக்க முடியும். அவனருளால் அவன் தாள் வணங்கி என்று சொல்கிறார்கள் இல்லையா? நாமாக நினைத்து ஒரு உபாசனை பண்ணுகிறோம் என்பது இல்லை. நமக்கு இறைவனின் அருள் பரிபூரணமாகக் கிடைத்தால் தான் உபாசனை பண்ண முடியும் என்பது கருத்து. அதன் அடிப்படையிலேயே, அவளைத் துதிக்க, அவள் துணையாக, வர வேண்டும் என்று கேட்கிறார் பட்டர் பெருமான்.
.... கண்மணி

23/6/21

Comments
Post a Comment