அபிராமி அந்தாதி -- 14 பூத்தவளே, புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம் காத்தவளே. பின் கரந்தவளே. கறைக்கண்டனுக்கு மூத்தவளே. என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே. மாத்தவளே. உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே (13) அம்பாள் தான் புவி ஏழையும் பெற்றவள் என்ற பொருளில் புவி ஏழையும் பூத்தவளே என்று முடித்தார். அவள் அருளை அறிந்து அவளை பக்தி செய்வதும், அப்படி பக்தி செய்யும் அடியார்க்கூட்டத்தில் இருப்பதும் புண்ணியம் என்றும் சொன்னார். பூத்தவளாய், அதாவது படைத்தவளாய் இருப்பவள், அவள் படைத்த இந்த பதினான்கு புவனங்களையும் அதாவது வானுலகம் ஏழும், பாதாள உலகம் ஏழும் சேர்த்து, காத்து வருகிறாள். எப்படிக் காத்து வருகிறாள்? பூத்தவண்ணமே காக்கிறாள். லலிதா ஸஹஸ்ரநாமத்தில், ஸ்ருஷ்டி கர்த்ரீ, ப்ரஹ்ம ரூபா, கோப்த்ரீ, கோவிந்த ரூபிணி, சம்ஹாரிணி, ருத்ர ரூபா, திரோதானகரீஸ்வரீ என்று அம்பாளை சொல்கிறோம். அவளே படைக்கிறாள், அவளே தன் கருணையால் காக்கிறாள், பின் அவளே தான் அதே கருணையினால், அத்தனை உலகங்களையும் தன்னுள் லயமாக்கிக் கொள்கிறார். படைத்தல் காத்தல் ஒடுக்குதல் தொழில் செய்யும் மூவ...
Posts
Showing posts from December, 2021